தமிழ்நாடு
பெண் பணியாளர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கலாம்- தொழிலாளர் நலத்துறை செயலர்
- கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்தது.
- இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் ஆவர்.
குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் நேரங்களில் பெண் பணியாளர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கலாம் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலர் குமார் ஜெயந்த் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் என்பதால் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.