நாட்டின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின்
- சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.
- மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் கூறியதாவது:
* தங்க நகை வியாபாரிகள் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். ரூ.126 கோடி செலவில் தங்க நகை உற்பத்திக்கு தொழில் வளாகம் அமைக்கப்படும். ஏராளமானோர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
* கோவைக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது திமுக அரசு.
* கோவை கிரிக்கெட் மைதானம் அமைக்க விரைவில் பணிகள் தொடங்கும்.
* கோவையில் புதிய தகவல் தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும். கோவை வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக தகவல் தொழில்நுட்ப மையம் அமையும்.
* சின்னியம்பாளையம் - நீலாம்பூர் வரை உயர்மட்ட சாலை நீட்டிக்கப்படும்.
* ரூ.26 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.
* ரூ.200 கோடி செலவில் மண் சாலைகள் தார் சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.
* மனித - விலங்கு மோதல் தடுக்க ரூ.7 கோடி மதிப்பில் யானைகள் உள்ளே வராத அளவிற்கு வேலி அமைக்கப்படும்.
* நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக அரசு.
* நாட்டின் 2வது பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
* வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும் என்று கூறினார்.