தமிழ்நாடு (Tamil Nadu)
null

மீன் கதை, மாற்று அரசியல் - முதல் மாநாட்டிலேயே சீமானை சீண்டினாரா விஜய்

Published On 2024-10-27 13:02 GMT   |   Update On 2024-10-27 13:10 GMT
  • நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து இன்றுநடைபெற்றது.
  • விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [த.வெ.க.] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்தனர்.

அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை என எடுத்துரைத்தனர்.

தற்பொழுது விஜய் அரசியல் கொள்கையை மிகவும் ஆவேசத்துடன் பேசினார். அப்பொழுது அவர் "மக்களுக்கு கொண்டு வர அரசியல் திட்டம் எல்லாம் மிகவும் பிராடிக்கலாக இருக்க வேண்டும். வொர்க் அவுட் ஆகாத திட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. அப்பொழுது அவர் "மீன் பிடிச்சு கொடுக்க கூடாது அது தப்பு மக்களுக்கு மீன் பிடிக்க கத்துக் கொடுக்கனும் அப்படி இப்படி சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா எங்களோட அரசியல் திட்டமே வேற முடிஞ்சவங்க மீன் பிடிக்கட்டும் முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சு அவங்களுக்கு கொடுத்து வாழவைப்போம்."

"நம்மளோட அரசியல் கட்சி எப்பயும் எதார்த்தமா இருக்குங்க . இந்த மாற்று அரசியல் , மாற்று சக்தி,  அத பண்றேன் இத பண்றேன்னு இந்த ஏமாத்து வேலை செய்ய இங்க வரலங்க. ஐயா ஏற்கனவே 11-12 இருக்குற அரசியல் கட்சில நானும் ஒரு ஆளா மாற்று அரசியல்-ன்னு சொல்லிகிட்டு . இந்த எக்ஸ்டரா லக்கேஜ்ஜா நான் இங்க வரல ப்ரோ. மாற்று அரசியல் மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை." என கூறினார்.

இவரது பேச்சில் மீன் கதை மற்றும் மாற்று அரசியல் பற்றிய கருத்துக்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானை த.வெ.க. தலைவர் விஜய் தாக்கியதாக நெட்டிசன்கள் கூறியதாக பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News