டெல்லி கணேஷின் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல- கமல்ஹாசன்
- நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கம், எழுத்தாளர் இந்திரா சொளந்தரராஜன் மறைவுக்கும் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி கணேஷின் மறைவுக்கு வெளியிட்டுள்ள பிதிவில், " டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.
அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " பத்திரிகை வாசகர்கள், தொலைக்காட்சி ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் தன் எழுத்துகளால் வசீகரித்த எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜனின் திடீர் மறைவு வருந்தத்தக்கது.
தன் இறுதி நாள் வரை எழுத்துத் துறையில் இடையறாமல் இயங்கி வந்த அவர் இன்று இறுதி ஓய்வு அடைந்திருக்கிறார்.
அவரது குடும்பத்தாருக்கும் வாசகர்களுக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.