தண்ணீரில் தத்தளிக்கும் மதுரை.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - முதல்வர் அதிரடி உத்தரவு
- கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
- வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாலாந்தூர், வி.பெருமாள்பட்டி, பண்ணப்பட்டி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. வி.பெருமாள் பட்டி, பண்ணப்பட்டி, கொங்கபட்டி உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்து, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.