சிவகங்கையில் மழை- விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்க அறிவுறுத்தல்
- டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.