வார இறுதியில் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதி வரை உயர்ந்து வந்தது. பின்னர் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து காணப்பட்டது. இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் விலை அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியானது. அதில் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என பேசியிருந்தார்.
போர் பதற்றம் காரணமாக தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வந்ததால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில் டிரம்பின் இந்த பேச்சு ஒருவகையில் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யாமல் பங்கு சந்தைகளின் பக்கம் கவனத்தை திருப்பினர். இதனால் நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.
இந்த விலை குறைவால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சந்தோஷம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. நேற்று 'அந்தர் பல்டி' அடித்தது போல, தங்கம் 'கிடுகிடு'வென உயர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க் கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், சவரனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,275-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
06-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,920
05-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,840
04-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-11-2024- ஒரு கிராம் ரூ. 103
07-11-2024- ஒரு கிராம் ரூ. 102
06-11-2024- ஒரு கிராம் ரூ. 105
05-11-2024- ஒரு கிராம் ரூ. 105
04-11-2024- ஒரு கிராம் ரூ. 106
03-11-2024- ஒரு கிராம் ரூ. 106