தென்காசி- சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் புகுந்த மழை நீர்
- மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
தென்காசி:
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.
மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், சேர்ந்தமரம், வீரசிகாமணி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.