null
என் தங்கச்சி.. அனிதாவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பு - உருக்கமாக பேசிய விஜய்
- என்கூட பிறந்த என்னோட தங்கச்சி வித்யா இறந்தபோது எனக்குள்ள பெரிய பாதிப்பு ஏற்படுத்துச்சு.
- பெண் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்தனும்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "எங்களது அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க போவது பெண்கள். என்கூட பிறந்த என்னோட தங்கச்சி வித்யா இறந்தபோது எனக்குள்ள பெரிய பாதிப்பு ஏற்பட்டுச்சு. அதுல கொஞ்சம் கூட குறையாத பாதிப்பும் வேதனையும் தங்கச்சி அனிதா இறப்பு எனக்கு ஏற்படுத்துச்சு.
தகுதி இருந்தும் தடையா இருக்கே இந்த நீட்டு.. அப்போ ஒரு முடிவு பண்ணேன். வாய் நிறைய விஜய் அண்ணா என்று கூப்பிடுகிற பெண் பிள்ளைகளின் கல்வி வாழ்க்கைக்கு ஒரு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்தனும்.
உங்கள் நண்பன், உங்கள் தோழன் விஜய் களத்திற்கு வந்துட்டேன். உங்களின் ஒருவனாக நான் வந்துள்ளேன்.
என்னோட அரசியல் கொள்கை எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும். வால்ரதுக்கு வீடு, வயிற்றுக்கு சோறு, வருமானத்துக்கு வேலை இதுதான் எங்களோட அடிப்படை அஜெண்டா. இந்த 2 விஷயத்துக்கும் உத்திரவாதம் கொடுக்காத அரசு இருந்தா என்ன போனா என்ன?" என்று தெரிவித்தார்.
நீட் தேர்வினால் மருத்துவ கனவு பறிபோனதால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரான கண்டன குரல்கள் பரவலாக எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.