த.வெ.க. மாநாட்டில் மயங்கியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.
- 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேன்க்-கள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.
மேலும், பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக த.வெ.க. மாநாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாநாட்டில் மயக்கமுற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். இவர் தவிர மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் தகவல். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 2 பேர், சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.