செய்திகள் (Tamil News)

விண்டோஸ் ஸ்டோரில் பெயின்ட் செயலி இலவசமாக கிடைக்கும்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

Published On 2017-07-26 04:40 GMT   |   Update On 2017-07-26 04:40 GMT
மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் பயன்தரும் செயலியாக இருக்கும் பெயினட் விரைவில் எலிமினேட் செய்யப்பட இருந்த நிலையில், விண்டோஸ் ஸ்டோரில் இந்த செயலி இலவசமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் வருங்கால அப்டேட்களில் இருந்து பெயின்ட் செயலி நீக்கப்படுவதாக தகவல் வெளியானது. இண்டர்நெட் முழுக்க எதிர்ப்பு அலைகளையும், வாடிக்கையாளர்கள் தங்களது வருத்தத்தை பதிவிட்டு வந்த நிலையில் பெயின்ட் செயலி விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'எம்.எஸ். பெயின்ட் பிரியர்கள் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: உண்மையான ஆர்ட் செயலி எங்கும் செல்லவில்லை - விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.' என மைக்ரோசாப்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் உடன் பெயின்ட் 3D செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியும் தொடர்ந்து விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும், இதற்கு தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கப்படும். 

புதிய 3D அம்சங்களோடு மட்டுமில்லாமல், பெரும்பாலான எம்.எஸ். பெயின்ட் அம்சங்களும் புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் விரைவில் எதிர்பார்க்கப்படும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் 1985-ம் ஆண்டில் வெளியான எம்.எஸ். பெயின்ட் செயலி இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது.

பிரபலமான பெயின்ட் செயலி இமேஜ் எடிட்டிங் செய்ய அதிகம் ஒத்துழைக்காது என்றாலும் இந்த செயலி கொண்டு எளிமையான கட் மற்றும் பேஸ்ட் உள்ளிட்டவற்றை செய்ய முடியும்.

Similar News