செய்திகள் (Tamil News)

மோட்டோ Z2 ஃபோர்ஸ் வெளியிடப்பட்டது: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Published On 2017-07-26 05:41 GMT   |   Update On 2017-07-26 05:41 GMT
லெனோவோ நிறுவனம் அதிகம் எதிரபார்க்கப்பட்ட மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. முந்தைய ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய சாதனத்திலும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

லெனோவோ பிரான்டு மோட்டோ Z2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. முந்தைய ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் ஷேட்டர்ஷீல்டு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா மற்றும் மோட்டோ மாட்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகிய மோட்டோ Z2 ஃபோர்ஸ் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதோடு 6.1 எம்.எம். யுனிபாடி வடிவமைப்பு மற்றும் மோட்டோ மாட்ஸ் வசதியை வழங்க பேக் பேனலில் போகோ பின் கனெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.   

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதியும், ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் மோட்டோ ஜி5 சீரிஸ்-இல் வழங்கப்பட்ட நேவிகேஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 



மோட்டோ Z2 ஃபோர்ஸ் சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் QHD 1440x2560 பிக்சல் டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 
* ஆண்ட்ராய்டு 7.1.1
* 2730 எம்ஏஎச் பேட்டரி 

அமெரிக்காவில் ஆகஸ்டு 10-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ Z2 ஃபோர்ஸ் விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.51,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபைன் கோல்டு, லூனார் கிரே மற்றும் சூப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கும் மோட்டோ Z2 ஃபோர்ஸ் மற்ற நாடுகளில் விரைவில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News