செய்திகள் (Tamil News)

6ஜிபி ரேம் கொண்ட நுபியா Z 17 மினி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-09-15 09:18 GMT   |   Update On 2017-09-15 09:18 GMT
நுபியா நிறுவனத்தின் Z17 மினி லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

இந்தியாவில் ஜூன் மாத வாக்கில் நுபியா நிறுவனத்தின் Z17 மினி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து Z17 மினி ஸ்மார்ட்போனின் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் நுபியா Z17 மினி லிமிட்டெட் எடிஷன் விலை ரூ.21,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட நுபியா Z17 மினி இந்தியாவில் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பதிப்பு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருந்த நிலையில் புதிய எடிஷன் அரோரா புளூ நிறத்தில் கிடைக்கிறது.  

நுபியா Z17 மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக அதன் கேமரா இருக்கிறது. 13 எம்பி டூயல் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. நுபியா Z17 மினி ஸ்மார்ட்போனில் சோனி கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு, சோனி ஃபுல் லைட் மோனோ சென்சார் மற்றும் RGB சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



நுபியா Z17 மினி சிறப்பம்சங்கள்:

- 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 24 எம்பி செல்ஃபி கேமரா
- 3225 எம்ஏஎச் பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்  
- ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ

அமேசான் தளத்தில் விவோ V7 பிளஸ் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகிதம் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவணை முறை வசதி, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா, ஸ்மார்ட்போனுடன் கூடுதலாக ரூ.499 செலுத்தும் போது ஆறு மாதங்களுக்கு திரையை சரி செய்யும் வசதி மற்றும் புக் மை ஷோ தளத்தில் முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Similar News