செய்திகள் (Tamil News)

காசா முனையில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி

Published On 2016-08-22 10:26 GMT   |   Update On 2016-08-22 10:26 GMT
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான காசா முனையில் இருந்து இன்று இஸ்ரேல் நாட்டின்மீது இங்குள்ள ஹமாஸ் போராளிகள் இன்று ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
ஜெருசலேம்:

காசா முனையில் இருந்து இன்று ஹமாஸ் போராளிகள் ஏவிய ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் ஸ்கெரோட் என்ற குடியிருப்பு பகுதியை தாக்கியது. அப்போது அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனடியாக, இதற்கு பதிலடியாக காசா நகரின்மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. பெய்ட் ஹனவுன் நகரில் உள்ள குடிநீர் தொட்டி உள்பட 30 பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக ஹமாஸ் போராளி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Similar News