செய்திகள் (Tamil News)

சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ். பிரச்சார நிறுவனர் பலியானதாக தகவல்

Published On 2017-06-01 01:28 GMT   |   Update On 2017-06-01 01:28 GMT
சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிரச்சார நிறுவனர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெய்ரூட்:

சிரியாவில் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுபாட்டில் இருக்கும் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரிய ராணுவம் மீட்டு வருகிறது.

அதற்காக தரைவழி, வான்வெளித் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக சிரியா - ஈராக் எல்லையில் உள்ள ஐ.எஸ் தீவிராதிகள் இருப்பிடத்தின் மீது அமெரிக்க படைகள் நேற்று நடத்திய வான்வெளித் தாக்குதலில், அந்த அமைப்பின் பிரச்சார நிறுவனர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மயதீன் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உதவி வரும் பிரச்சார அமைப்புகளுள் ஒன்றான நோடோரியஸ் அமாக் அமைப்பு தலைவர் ரயான் மாஷால் (அ) (பாரா கதாக்)  கொல்லப்பட்டதாக சிரிய எதிர்ப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை சிரிய ஆர்வலர்கள் பலர் அவர்களது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். மயதீன் நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரயான் மாஷாலுடன் அவரது மகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Similar News