செய்திகள் (Tamil News)

பிரிட்டன் பாராளுமன்ற வை-பை மூலம் 24,473 முறை ஆபாச தளத்திற்குள் செல்ல முயற்சி

Published On 2018-01-08 10:23 GMT   |   Update On 2018-01-08 10:23 GMT
பிரிட்டன் பாராளுமன்ற வை-பை நெட்வொர்க்கில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளத்திற்கு செல்ல முயற்சி நடந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்றத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் தனி நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன. இந்த நெட்வொர்க்கில் ஆபாச  இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரிட்டன் ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள இணைய தொடர்பை எம்.பி.க்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆபாச தளங்களுக்குள் செல்லும் முயற்சி வேண்டுமென்றே நடப்பது போல தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே-வின் நெருக்கமான அரசியல் நண்பர் தாமியன் க்ரீன் பாலியல் குற்றச்சாட்டால் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டெரில் உள்ள அவரது அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச தளங்களுக்கு சென்றதாக ஆதாரம் இருந்ததாக கூறப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News