செய்திகள்

ஜப்பானில் தொடரும் கனமழை - 15 பேர் பலி

Published On 2018-07-07 07:23 GMT   |   Update On 2018-07-07 07:23 GMT
கடந்த சில தினங்களாக ஜப்பானில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர் .
டோக்கியோ :

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் பரவாலாக அந்நாடு பாதிப்புகள் மற்றும் சேதங்களை சந்திப்பது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News