செய்திகள்

தற்கொலை படை ஆளில்லா விமானங்கள் - ரஷிய நிறுவனம் தயாரிப்பு

Published On 2019-02-24 10:43 GMT   |   Update On 2019-02-24 10:43 GMT
தற்கொலைபடை தாக்குதல் நடத்தும் மிகச்சிறிய அளவிலான ஆளில்லா விமானங்களை ரஷிய நிறுவனம் தயாரித்துள்ளது. #suicidesquads

மாஸ்கோ:

ரஷியாவை சேர்ந்த கலாஸ்னி கோவ் நிறுவனம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை கண்டுபிடித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது தற்கொலைபடை தாக்குதல் நடத்தும் மிகச்சிறிய அளவிலான ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளது.

இதற்கு ‘கே.யூ.மி-யூ.ஏ.வி.’ என பெயரிடப்பட்டுள்ளது. 4 அடி அகலம் கொண்ட இந்த ஆளில்லா விமானம் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.

இது 40 மைல் தூரத்துக்கு சுமார் 2½ கிலோ எடையுள்ள குண்டுகளை சுமந்து சென்று வீசும் சக்தி படைத்தது. தற்கொலை படை ஆளில்லா விமானங்கள் அபுதாபியில் நடந்த ராணுவ கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த வகை விமானத்துக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் இவற்றை வைத்து வெடி குண்டு தாக்குதல் போன்ற நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். எனவே இதை புழக்கத்தில் விடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. #suicidesquads

Tags:    

Similar News