செய்திகள் (Tamil News)
சுலாவெசி

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

Published On 2021-06-03 11:31 GMT   |   Update On 2021-06-03 11:50 GMT
இந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில் இருந்து கிழக்கே 224 கி.மீ. தூரத்தில், இந்தோனேசிய நேரப்படி 15.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.

6-க்கு மேல் என்றாலே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலநடுக்கமாக இருக்கும். இந்த நிலநடுக்கத்தால் இழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து உடனடி தகவல் கிடைக்கவில்லை. 

Similar News