உலகம்

தாக்குதலுக்கு தயாராக உள்ள வீரர்

உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை

Published On 2022-06-09 16:34 GMT   |   Update On 2022-06-09 16:34 GMT
  • டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.

கீவ்:

உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூலிப்படை நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. இந்த மூன்று பேரும் கூலிப்படையினர் என்றும், போர்க் கைதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்றும் பிரிவினைவாதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News