உலகம்

கொலம்பியாவில் விமான விபத்து- அரசியல்வாதிகள் 5 பேர் உயிரிழப்பு

Published On 2023-07-19 22:28 GMT   |   Update On 2023-07-19 22:48 GMT
  • ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள்.
  • இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் அக்கட்சி வருத்தம் தெரிவித்தது. மேலும், விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்றுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News