உலகம்
சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
- அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார்.
- ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேபிடாவ்:
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூகி. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அவர் கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இருப்பினும் கிளர்ச்சியாளர்களால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே ஆங் சான் சூகிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்பட 3300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.