உலகம்
துருக்கி அதிபராக மீண்டும் பதவியேற்றார் எர்டோகன்
- துருக்கி அதிபராக ஏர்டோகன் 3வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
- கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அங்காரா:
துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகள் பெற்றார்.
இந்நிலையில், தலைநகர் அங்காராவில் நடைபெற்ற விழாவில் எர்டோகன் துருக்கி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, கொட்டும் மழையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது
துருக்கியின் பிரதமராகவும் அதிபராகவும் கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.