உலகம் (World)

இலங்கை அதிபர், பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2024-10-04 18:42 GMT   |   Update On 2024-10-04 18:42 GMT
  • வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார்.
  • அவர் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.

கொழும்பு:

இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றது.

இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார். புதிய அரசு அமைந்தபின் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு முக்கிய தலைவர் ஜெய்சங்கர் ஆவார்.

இலங்கை சென்ற மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் அனுரகுமரா திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினியை தனித்தனியாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் இந்தியாவின் உதவியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை மேலும் அதிகரித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

Similar News