தங்கியிருக்கும் வரை மனைவி.. 'பிரியமானவளே' பட பாணியில் தற்காலிக திருமணம் செய்யும் சுற்றுலா பயணிகள்
- சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்
- இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது
இந்தோனேசியவில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தோனேசிய கிராமங்களில் உள்ள இளம்பெண்கள் இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் [Puncak] நகரில் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகிறன. மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.
PLEASURE மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்கு சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் அங்குத் தங்கியுள்ள காலம் வரை, வாரக் கணக்காகவோ மாதக் கணக்காகவோ அவர்களுக்கு இப்பெண்கள் மனைவியாக வாழ்வர். சுற்றுலாப் பயணிகள் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வகை திருமணத்தில் தள்ளுகின்றன. பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்யேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இம்முறைக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறன. விஜய் சிம்ரன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரயமானவளே' படத்தில் ஹீரோ ஹீரோயினை கான்டிராக்ட் திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.