உலகம் (World)

பணம் தந்தால் மட்டுமே துர்கா பூஜை: இந்து மண்டல்களுக்கு மிரட்டல் கடிதம்

Published On 2024-09-24 03:36 GMT   |   Update On 2024-09-24 03:36 GMT
  • தினசரி தொழுகையின்போது துர்கா பூஜை பந்தல்களுக்கு வங்கதேச அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • துர்கா பூஜை மண்டல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்குகிறது.

டாக்கா:

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது இங்கு வசிக்கும் இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர். கடந்த சில ஆண்டாக துர்கா பூஜை காலங்களில் இந்துக்கள்மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்தன. துர்கா பூஜையின்போது இந்துக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வங்கதேச அரசு உத்தரவிட்டது.

துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளது என உள்துறை ஆலோசகர் தெரிவித்தார்.

இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட உள்ள சில மண்டல்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும். அப்படி தந்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக மண்டல்களின் பொறுப்பாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 20-ம் தேதி சில மண்டல்களின் பிரதிநிதிகள் டகோப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். ராணுவக் குழுவுடன் இணைந்து ரோந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News