உலகம் (World)

முன்னாள் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்கு பேஜர் வெடிப்பு காரணமா?: சந்தேகம் கிளப்பும் ஈரான் எம்.பி.

Published On 2024-09-24 04:26 GMT   |   Update On 2024-09-24 04:26 GMT
  • ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
  • மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

டெஹ்ரான்:

மறைந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாயன் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். கடும் பனி சூழ்ந்த வானிலை காரணமாக விபத்து நிகழ்ந்தது என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது.

இதற்கிடையே, லெபனானில் கடந்த வாரம் பேஜர் மற்றும் வாக்கி டாக்கி கருவிகளால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களில் சுமார் 40 பேர் பலியாகினர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈரான் முன்னாள் அதிபரான இப்ராகிம் ரெய்சியும் பேஜர் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார் என அந்நாட்டு எம்.பி.யான அகமது பக்ஷயேஷ் அர்தேஸ்தானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அகமது கூறுகையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு பேஜரை பயன்படுத்தினார். அவர் பயன்படுத்திய பேஜரின் வகை ஹிஸ்புல்லா படைகளிடம் இருந்து வேறுபட்டதாக இருக்கலாம். இருப்பினும், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சாத்தியமான காட்சிகளில் ஒன்று அவரது பேஜர் வெடித்திருக்கலாம். பேஜர்களை வாங்குவதில் ஈரான் பங்கு வகித்துள்ளது. ஈரானியப் படைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களை வாங்குவதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. எனவே, எங்கள் சொந்த புலனாய்வு அமைப்புகளும் இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News