'தாயை பலாத்காரம் செய்வேன்'.. பிரதமர் இல்லத்தின் அருகே நடந்த போராட்டத்தில் கீழ்த்தரமாக பேசிய போலீஸ்
- நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது.
- நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரின் விளைவுகள் விபரீதமானதாக மாறி வருகிறது. இஸ்ரேலிலும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போரை சரிவர கையாளவில்லை என்று மக்கள் கொதிப்பில் உள்ளதாக தெரிகிறது. அவ்வப்போது அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை கட்டுப்படுத்த கடுமையான நடவைடிகைகளை நேதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அல் - குத்ஸில் திரண்ட சுமார் 1,30,000 போராட்டக்காரர்கள் இஸ்ரேலில் புதிதாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், காசாவில் பிணைகக் கைதிகளாக மீதமுள்ள 100 இஸ்ரேலியர்களை விரைவில் மீட்க கோரியும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க இஸ்ரேல் போலீசார் கடுமையான முறைகளை பிரயோகித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் பாரிஸ் சதுக்கத்தில் உள்ள பிரதமர்நேதன்யாகு இல்லத்தின் அருகே திரண்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டத்தொடங்கினர்.
அப்போது போலீஸ் ஒருவர் போராட்டக்காரிடம் மிகவும் கீழ்த்தரமான வகையில், ' நான் உன் தாயை பலாத்காரம் செய்வேன்' என்று மிரட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் சிலரை போலீஸ் கும்பல் ஆக்ரோஷமாக கையாளும் சமபாவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று போராட்டம் நடந்த இடங்களிலெல்லாம் போலீசின் கடுமையான அணுகுமுறையை இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.