உலகம்

வரி ஏய்ப்பு விவகாரம்: குற்றத்தை ஒப்புக் கொண்ட ஹண்டர் பைடன்

Published On 2024-09-06 03:38 GMT   |   Update On 2024-09-06 03:38 GMT
  • வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
  • ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஹண்டர் பைடனின் இந்த செயல், அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் அதிபர் பைடனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

54 வயதான ஹண்டர் பைடன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் சூழல் உருவாகலாம் என்று ஹண்டர் பைடன் இவ்வாறு செய்ததாக தெரிகிறது.

அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ஸ்கார்சி வழக்கில் டிசம்பர் 16 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் ஹண்டர் பைடனுக்கு அதிகபட்சம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்படலாம். 

Tags:    

Similar News