உலகம்

என்னுடைய விவாதங்களிலேயே சிறந்தது: டொனால்டு டிரம்ப்

Published On 2024-09-11 05:07 GMT   |   Update On 2024-09-11 05:07 GMT
  • கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட்- டொனால்டு டிரம்ப்.
  • டொனால்டு டிரம்ப் சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர்- கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

இருவரும் இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர். இருவரும் பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் ஆகியவற்றை பற்றி பரஸ்பர விமர்சனத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின் இஸ்ரேல்- ஹமாஸ், உக்ரைன்- ரஷியா போர் குறித்தும் தங்களது பார்வையை முன்வைத்தனர். தனிப்பட்ட முறையிலும் விமர்சனங்களை முன்வைக்க தவறவில்லை.

கமலா ஹாரிஸை மார்க்சிஸ்ட் என டொனால்டு டிரம்ப் விமர்சித்தார். அதேவேளையில் உலக நாடுகள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கின்றனர். டிரம்ப் அவமானம் என உலகத் தலைவர்கள் சொல்வதாக கமலா ஹாரிஸ் விமர்சித்தார். மேலும், சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர் என குற்றம்சாட்டினார்.

இந்த விவாதம் முடிவடைந்த நிலையில், "இதுவரை நான் கலந்து கொண்டதில், கமலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதம்தான் என்னுடைய விவாதங்களில் சிறந்த விவாதம் என்று நினைக்கிறேன்" என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

முதல் விவாதத்தில் ஜோ பைடன் டொனால்டு டிரம்பிற்கு எதிராக திணறினார். இதனால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என டொனால்டு டிரம்ப் நினைத்தார். ஆனால் ஜனநாயக கட்சி ஜோ பைடனுக்கு பதலாக கமலா ஹாரிஸை களம் இறக்கியது. அதன்பின் தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

Tags:    

Similar News