கொலம்பியா நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு
- நிலச்சரிவில் சிக்கி 8 சிறுவர்கள் உள்பட 34 பேர் பலியாகி உள்ளனர்.
- தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பகோடா:
தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று முன்தினம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகினர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் 8 சிறுவர்களும் அட்ங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.