உலகம்

டிரோன் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் உயிரிழப்பு

Published On 2024-08-11 01:31 GMT   |   Update On 2024-08-11 01:32 GMT
  • மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்
  • தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள் சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மாரில் இருந்து சிறுபான்மை மக்களான ரோகிங்கியாமுஸ்லிம்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மத ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் அதிகமானோர் வங்காள தேசத்தில் குடியேறி வருகின்றனர்.

 

2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தப்பி சென்றுள்ளனர். மியான்மாரில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தாங்கள் எடுத்துச்சென்ற சொற்ப உடைமைகள்  சிதறிக்கிடக்க அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கின்றன.

இதில் உயிர் தப்பிய 3 பேர் கூறும்போது, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் எனத் தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மியான்மாரில் இருந்து முஸ்லிம் சிறுபான்மையினரான ரோகிங்கியாக்கள் படகுகளில் தப்பிச் சென்றபோது, நப் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை வங்காளதேச ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.  

Tags:    

Similar News