உலகம்

வெப்ப அலையால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு- ஹஜ் யாத்ரீகர்கள் 550பேர் உயிரிழப்பு

Published On 2024-06-19 01:54 GMT   |   Update On 2024-06-19 01:54 GMT
  • மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
  • வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மெக்கா:

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News