தெருநாய்களுக்கு உணவு வழங்கும் ஏ.டி.எம். எந்திரம்... பேடிஎம் நிறுவனரின் புது முயற்சி
- நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
- விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.
பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாய்களுக்கான உணவு வழங்கும் எந்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் மெஷின் எந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலம். அதுபோல நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
இந்த எந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு சிறிதளவு மற்றும் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெருநாய்களும் பசியாறும்.
விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான யோசனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் இதுகுறித்த பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார். அவரது ஆதரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.