ஈரானுக்கு தானியங்கள் ஏற்றிச்சென்ற கப்பலை தாக்கிய ஹவுதி
- இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஒரு கப்பலை சிறைப்பிடித்த நிலையில், ஒரு கப்பலை மூழ்கடித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமன் நாட்டியில் செயல்பட்டு வரும் ஹவுதி குழு செயல்பட்டு வருகிறது.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹவுதி குழுவினருக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் ஏவுகணைகள் மூலம் ஹவுதி தனது தாக்குலை தொடர்கிறது.
அப்படித்தான் கீரிஸ் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மார்ஷல் தீவின் கொடியுடன் சென்ற கப்பல் மீது நேற்று முன்தினம் ஹவுதி தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பல் சேதமாகி, தண்ணீர் கப்பலுக்குள் சென்றது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு ஆபத்து ஏதும் நேரவில்லை.
இந்த நிலையில் லாக்ஸ் என்ற தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஈரானுக்கு தானியங்கள் ஏற்றி சென்றது எனத் தெரியவந்துள்ளது. கப்பல் முழுவதும் தானியங்கள் நிரம்பியிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஹவுதி குழுவுக்கு ஈரான்தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆதரவு அளித்த நாட்டிற்கு தானியங்கள் கொண்டு சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மூன்று மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. மற்றொரு கப்பலை மூழ்கடித்தது.
நேற்று ஏமன் மீது பறந்த டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க விமானப்படை டிரோன் ஏதும் மாயமாகவில்லை எனத் தெரிவித்துள்ளது.