உலகம்

"டிரம்ப் 2024" தொப்பியை அணிந்த ஜோ பைடன்: நன்றி தெரிவித்த டிரம்ப் பிரசார குழு

Published On 2024-09-12 06:57 GMT   |   Update On 2024-09-12 06:57 GMT
  • 2001 தாக்குதல் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • டிரம்ப் 2024 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்ததால் அனைவரும் ஆச்சர்யம்.

2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரட்டை கோபுரத்துடன், பென்டகன் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 9/11 தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஷாங்க்ஸ்வில்லி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார்.

2001 சம்பவத்தின்போது தீயணைப்பு வீரர்களின் பங்கை குறிப்பிட்டு பேசினார். அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஏராளமானவர்களின் உயிர்களை காப்பாற்றியதை நினைவு கூர்ந்தார். மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக ஏராளமான வீரர்கள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது அனைத்து தரப்பில் இருந்தும் அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக நாட்டு மக்கள் நின்றனர். அதேபோல் தற்போதுதம் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அரசியல் கலத்தில் டொனால்டு டிரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து வரும் ஜோ படைன், அவரது தொப்பியை அணிந்திருந்தது அங்கிருந்தவர்கள் புருவங்களை உயர்த்த செய்தது.

இது தொடர்பாக டொனால்டு டிரம்பிற்கு பிரசாரம் மேற்கொண்ட ஜோ பைடனுக்கு நன்றி என டிரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஒளிபரப்பாளர் பியர்ஸ் மோர்கன், "ஜோ பைடன் வெறும் டொனால் டிரம்ப் தொப்பியை வைத்தது வெறும் ஜோக் அல்ல. அவர் உண்மையிலேயே செய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்பியன் வார் ரூம் (War Room) ஆதரவுக்கு நன்றி ஜோ எனப் பதிவிட்டுள்ளது.

டொனால்டு டிரம்பிற்கு எதிரான நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன் திணறினார். இதனால் அவர் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை பரிந்துரைத்தார். தற்போது கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் டிரம்பை எதிரித்து போட்டியிடுகிறார். இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற விவாதத்தில் டொனால்டு டிரம்ப்- கமலா ஹாரிஸ் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹாரிஸ்க்கு அதிக ஆதரவு கிடைத்தது.

Tags:    

Similar News