டிரம்ப் அதிபர் ஆவதால் பதற்றத்தில் பெண்கள்.. அமெரிக்காவில் பரவும் 4B இயக்கம்.. ஏன் தெரியுமா?
- டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சி.
- பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க பெண்கள் மத்தியில்4B என்ற இயக்கம் பிரபலமாகி உள்ளது. இந்த இயக்கதில் இணைவோர் உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தைகள் வேண்டாம் என்று வாதிடுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
தென் கொரியாவில் கடந்த சில காலமாக பிரபலமாக இருந்து வரும் 4B இயக்கம், தற்போது அமெரிக்க பெண்களையும் ஈர்த்துள்ளது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சியைக் கண்டது.
டொனல்டு டிரம்பின் வெற்றி- ஆண் வாக்காளர்களால் சாத்தியமாகி இருப்பதாகவும், சில இளம் அமெரிக்க பெண்கள் ஆண்களைப் புறக்கணிப்பதைப் பற்றி பேச துவங்கியுள்ளனர். இந்த விவகாரம் டிக்டாக் மற்றும் ஆன்லைனில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது. 4B இயக்கம் ஆண்களை பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.
4B எனப்படும் தென் கொரிய இயக்கமானது ஆண்களை புறக்கணிக்கும் ஒருவகை சத்தியம் செய்வதாகும். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, 4பி இயக்கத்தில் இணைவதாக பல அமெரிக்க பெண்கள் சத்தியம் செய்து வருகின்றனர். 4 எண்கள் (bi என்றால் கொரிய மொழியில் "இல்லை"). இது ஆண்களுடன் டேட்டிங் செய்ய மறுப்பது, ஆண்களுடனான பாலியல் உறவுகள், வேற்று பாலின திருமணம் மற்றும் பிரசவம் ஆகியவற்றை மறுப்பது ஆகும்.