சுவிட்சர்லாந்தில் உலகத் தலைவர்கள் கூட்டம்: உக்ரைனில் அமைதி நிலவ வழி ஏற்படுத்துமா?
- உக்ரைன்-ரஷியா இடையே இரண்டு ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது.
- உக்ரைன் எல்லைப் பகுதியில் பெரும்பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கால்வாசி பகுதிகளை ரஷியா பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனில் அமைதி திரும்பவும், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் உலகத் தலைவர்களின் உதவிகளை நாடி வருகிறார்.
அவ்வப்போது ரஷிய அதிபர் போர் நிறுத்தத்திற்கான ஒரு பரிந்துரையை முன்மொழிவார். அதை உக்ரைன் ஏற்றுக்கொள்ளாது. உக்ரைன் மண்ணில் இருந்து ரஷியப் படைகள் வெளியேறும்வரை புதின் உடன் நேரடி பேச்சு கிடையாது என்பதில் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக உள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வழங்கு ஆயுத உதவிகளை வைத்து ரஷியாவை உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைனில் அமைதி நிலவ ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக நாளை சுவிட்சர்லாந்தில் ஒன்றுகூடுகின்றனர்.
இதில் ஈகுவேடார், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா அதிபர்கள் கலநது கொள்ள இருக்கிறார்கள். அதேபோன்று ஐப்பிரோப்பியாவின் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கக்ப்படுகிறது.
அமெரிக்கா சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள இருக்கிறார். துருக்கி, சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரிகளை அனுப்புகிறது. இந்தியா, தென்ஆப்பிரிக்கா பொன்ற நாடுகள் அதிகாரிகளை பிரதிநிதியாக அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் ரஷியா கலந்து கொள்ளவில்லை. அமைதி பேச்சுவார்த்தையில் ரஷியா மற்றும் உக்ரைன் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என சீனா தெரிவித்துள்ளது.
என்னவாக இருந்தாலும் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் போர் நிறுத்தம் ஏற்பட இந்த கூட்டத்தில் முதல்அடி எடுத்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷிய அதிபர் புதின் நேற்று, "உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட்டால், 2022-ல் தங்களுடைய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து உக்ரைன் துருப்புகளை திரும்பப் பெற்றால் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாயர்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் புதினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.