விடுதலை போராட்ட தியாகிகள் உதவிதொகை 2 ஆயிரம் உயர்வு
- கவர்னர் தமிழிசை ஒப்புதல்
- ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் புதுவை மாநில விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதன்படி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த உயர்வு இந்த நவம்பர் மாதம் முதல் நடை முறைப்படு த்தப்படுகிறது. இதன்மூலம் புதுச்சேரியில் 939 பேர் காரைக்காலில் 174 பேர் மாகேவில் 87 பேர், ஏனாம் பகுதியில் ஒருவர் என மொத்தம் ஆயிரத்து 201 விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மாதாந்திர உதவித்தொகை உயர்த்த ப்படுவது தொடர்பாக புதுவை மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள், 1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.