புதுச்சேரி

பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்ட காட்சி.

பெயிண்டரின் மகளுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு

Published On 2023-07-16 06:04 GMT   |   Update On 2023-07-16 06:04 GMT
  • பத்மஸ்ரீ நிறுவனம் வழங்கியது
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.

புதுச்சேரி:

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பத்மஸ்ரீ என்ற நிறுவனம் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை மாநிலங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தரமான பெயிண்ட் பிரஷ், ரோலர், மற்றும் ஓவிய பிரஷ்களை விற்பனை செய்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பெயிண்டர்களின் குழந்தைகளை தேர்வு செய்து ஆண்டு தோறும் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கி வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டு பிளஸ் -2 தேர்வில் 600-க்கு559 மதிப்பெண் பெற்ற புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த பெயிண்டர் ரங்கநாதன் என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இத்தொகையை புதுவை முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள ப்ளூ எண்டர்பிரைசஸ் உரிமையாளர் கோபால கிருஷ்ணன், பத்மஸ்ரீ நிறுவனத்தின் மேலாளர் சீனுவாசன் மற்றும் புதுவை முகவர் சிவராமன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News