- புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக குடிபோதையில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் கனரக வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே ஒரு வாலிபர் மது குடித்து விட்டு பொதுமக்களுக்கு இடை யூறாக ரகளை செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகளை செய்த அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் மயிலம் அருகே பாதிரியாபுலியூரை சேர்ந்த சீனிவாசன்(வயது30) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபோல் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரகளை செய்த லாஸ்பேட்டை வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு(33) என்பவரை லாஸ்பேட்டை போலீசாரும், உழவர்கரை குண்டு சாலை ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்ட மூலம்குளம் அன்னை தெரேசாநகரை சேர்ந்த ரவி(37) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசாரும், சேதராப்பட்டு சந்திப்பில் போதையில் பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்ட வானூர் அருகே கொடூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (40) என்பவரை சேதராப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
மேலும் திருக்கனூர் அருகே மணலிபட்டு பாலத்தில் நின்று கொண்டு பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வானூரை சேர்ந்த சக்ரபாணி(35) மற்றும் ராஜேஷ்(32) ஆகியோரை திருக்கனூர் போலீசாரும், சந்தை புதுக்குப்பம் புது அய்யனார் கோவில் தெருவில் ரகளை செய்த அதே பகுதியை சேர்ந்த முத்தாள்ராயன்(25) என்பவரை காட்டே ரிக்குப்பம் போலீசாரும், கரியமாணிக்கத்தில் சாராயக்கடையில் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்த ஜெயகுமார் (24) என்பவரை நெட்டப்பாக்கம் போலீசாரும் கைது செய்தனர்.
இதேபோல் திருபுவனை, முதலியார்பேட்டை, தவளக்குப்பம், பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடி போதையில் ரகளை செய்த 4 பேரை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.