null
- புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே பாகூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவையில் 3 நம்பர் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை மீறி புதுவையில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. அவ்வபோது லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்தாலும் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாகூர் பங்களா தெருவில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது பங்களா வீதியில் ரோந்து பணி சென்ற போது அங்கு நின்று இருந்த சிலர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயற்சித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்த சரவணன் (45) என்பதும், இவர் வீட்டின் அருகே ரகசியமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழகப் பகுதியான உச்சி மேடு பகுதியைச் சேர்ந்த கதிரேசன் (54) என்பவரிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் சரவணன் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் அதிரடிப்படை மற்றும் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் கதிரேசனை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை செய்த ரூ.2 லட்சத்து 12ஆயிரத்து 690 ரொக்க பணமும், 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட லேப்டாப், பிரிண்டர், 7 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் வாணரப்பேட்டையில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்கு செல்போன் மூலம் வாடிக்கையாளர்க ளுக்கு லாட்டரி விற்பனை செய்த 2 பேரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது33) மற்றும் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த ரமேஷ் என்ற மனோஜ்(42) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து மோட்டார் சைக்கிள் 2 செல்போன், லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாரம் வெங்கடேஸ்வரா நகரில் லாட்டரி சீட்டு விற்ற சக்தி நகரை சேர்ந்த ரகு 43) பழைய சாரம் பகுதியை சேர்ந்த சங்கர் 49) ஆகிய 2 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.82 ஆயிரத்து 770 ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.