திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
- திருநள்ளாறில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பேட்டை அரக்குக்கடை அருகில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, பேட்டை மெயின்சாலையைச்சேர்ந்த ராஜசேகரன் (வயது 42) என்பவரை பிடித்து சோத னைச் செய்தனர். அப்போது, சிலருக்கு செல்போன் மூலம் 3 எண் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணையில், அதனை அவர் ஒப்புகொண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், திருநள்ளாறு சுரக்குடி சந்திப்பில், மர்ம நபர் ஒருவர் புதுச்சேரி அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற, சுரக்குடி சித்ரா காலனியைச்சேர்ந்த குமார் (48) என்பவரை பிடித்து சோதனை செய்தபோது, சிலருக்கு செல்போன் மூலம் லாட்டரி விற்றது தெரிய வந்தது. விசாரணை யில், அதனை அவர் ஒப்புகொ ண்டதால், போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 செல்போன், ரூ.250 பணத்தை பறிமுதல் செய்தனர்.