200 குடும்ப தலைவிகள் மாத உதவி தொகை பெற ஆணை
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கனக செட்டிக் குளம் முத்தாலம்மன் நகரில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவிதொகை மற்றும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் அடையாள அட்டை 200 பயனாளிகளுக்கும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுப்புடன் கூடிய இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் 22 பயனாளிகளுக்கும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழாவில் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, கனக செட்டிகுளம் மற்றும் பிள்ளை சாவடி ஆகிய கிராமங்களில் இருந்து அனைத்து கிராம பஞ்சாயத் தார்கள், பா.ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.