2-வது நாளாக தீப்பற்றி எரியும் முட்புதர்கள்
- வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.
- வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தின் 2-வது பெரிய ஏரியாக பாகூர் ஏரி இருந்து வருகிறது.
இந்த ஏரியிலிருந்து தண்ணீரை பாசனத்திற்காக வும் பறவைகள் சரணாலயத்திற்காகவும் பராமரித்து வருகின்றனர். இந்த பாகூர் ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
கடந்த மழையில் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய நிலையில் தற்போது வரண்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்து வருவதால் புற்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது காய்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென புற்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீ மளமளவென ஏரி முழுக்க பரவி எரிந்து வந்தது. இந்த தீயை அணைக்க வழி இல்லா ததால் தீயணைப்பு வண்டிகள் எதுவும் வர வில்லை.
2-வது நாளாகவும் எரிந்து வருகி றது. தகவல் அறிந்தவுடன் தமிழக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள மரக்கிளை மற்றும் செடி களையும் அகற்றி தீயை அணைத்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான தீ அணைந்து உள்ளது.
ஆனால் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏரி பகுதியில் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு நிலைய வண்டியோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் வராததால் தொடர்ந்து அந்த பகுதியில் எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரி வனத்துறை அதிகாரி வஞ்சலவள்ளி சம்பவ இடத்தில் வந்து ஆய்வு செய்தார்.
அதன் பின்னரே புதுவை வனத்துறையினர் தீயை அணைத்து வருகிறார்கள்.