- கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.
- ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் ரோகிணி நகர் பகுதியை சேர்ந்தவர் பாரி (வயது 45).
இவர் கடலூர்- புதுவை மெயின் ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் கட்டுமான பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மையம் அருகில் 2 கடைகள் நடத்தி வருகிறார்.
கடந்த 4-ந் தேதி வேலை முடிந்து கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் 4 காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரிலிருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது.
மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அந்த கடையில் பணம் இல்லாததால் திருடன் திரும்பிச் சென்று விட்டதாக தெரிகிறது.
மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக நபர் ஒருவர் உள்ளே சென்று பணத்தை தேடிய சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
எவ்வித முகமூடி அணியாமல் கையில் சுத்தியுடன் துணிச்சலாக தனிநபர் ஒருவர், பணம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து பூட்டு உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து அந்த மர்ம நபரை வலை வீசி தேடி வருகிறார்கள்.