புதுச்சேரி

கோப்பு படம்.

இரும்பு கம்பிகள் திருடிய 3 வாலிபர்கள் கைது

Published On 2022-12-13 08:24 GMT   |   Update On 2022-12-13 08:24 GMT
  • மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது.
  • இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.

புதுச்சேரி:-

மணவெளி தொகுதி டி.என்.பாளையம் பகுதியில் மலட்டாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் புதுவை பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு மழை நீர் சேகரிப்பதற்காக தடுப் பணை அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் ஸ்ரீநாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அப்போது தடுப்பணையில் வைக்குப்பட்டிருந்த ரூ.1லட்சம் மதிப்பிலான ஷட்டரில் இரும்பு கம்பிகள் அறுக்கப்பட்டு திருடு போனது தெரியவந்தது. இதனால் அதன்மூலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீரும் வெளியேறிவிட்டது.

இது சம்பந்தமாக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தடுப்ப ணையில் இரும்பு கம்பிகளை திருடிய டி.என். பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் , சூர்யா மற்றும் போஸ்தரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் அப்பகுதி வீடுகளில் இருந்த 4 மின்மோட்டார்கள், மினி லாரியில் இருந்த பேட்டரி பொருட்களும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News