புதுச்சேரி

‘எனது பில் எனது உரிமை’ என்ற பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்த போது எடுத்த படம். 

38 பெண் குழந்தைகளுக்கு ரூ. 19 லட்சம் வைப்பு தொகை

Published On 2023-09-02 08:53 GMT   |   Update On 2023-09-02 08:53 GMT
  • வங்கி புத்தகத்தை தாய்மார்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
  • புதுவையில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் ரூ. 50 ஆயிரம் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக டெப்பாசிட் செய்யப்படும் என கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் மார்ச் 17-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அன்றைய தினத்திலும் அதற்கு பின்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் தொடக்க விழா திலாசுபேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் இல்லத்தில் நடந்தது.

அமைச்சர்தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் ரங்கசாமி பெண் குழந்தைகளின் தாய்மார்களி டம் ரூ.50 ஆயிரம் டெப்பாசிட் செய்த வங்கி புத்தகத்தை வழங்கினார்.

திட்டம் அறிவிக்கப்பட்ட மார்ச் 17-ந் தேதி மற்றும் அதன் பிறகும் பிறந்த 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ 19 லட்சம் டெப்பாசிட் செய்யப்பட்டு வங்கி புத்தகம் வழங்ப்பட்டது.

அதேபோல் புதுவையில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதியை சேர்ந்த 1 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

ஏற்கனவே 13 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். தற்போது புதிதாக 55 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான அடையாள அட்டை எம்.எம்.ஏ.க்கள் மூலம் அந்தந்த தொகுதியில் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News