ரூ.4½ கோடியில் திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம்
- அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.
புதுச்சேரி:
புதுவை சிறந்த பொழுது போக்கு சுற்றுலா நகரமாக உருவெடுத்து வருகிறது.
புதுவையில் திறந்தவெளி பொதுழுபோக்கு அரங்கம் இல்லை. காந்தி திடலில் சிறிய அரங்கம் மட்டுமே உள்ளது. அனைத்து வசதிக ளுடன் கூடிய பிரம்மாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க அரசு திட்டமிட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை பழைய துறைமுக வளாகத்தில் ரூ.4 கோடியே 42 லட்சத்தில் பிரமாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டன.
கடந்த ஜனவரியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது இரு பக்கமும் கேலரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த அரங்கில் பிரமாண்ட மேடை, ஆண், பெண் கலைஞர்களுக்கு 2 அறைகள், 3 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி, ஆயிரத்து 675 சதுரமீட்டரில் 400 வி.ஐ.பி.க்கள் அமரும் கேலரி அமைக்கப்பட உள்ளது.
420 சதுரமீட்டரில் கடல் அழகை ரசிக்கும் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்த அரங்கம் அமைக்கப்பட்டால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.