- புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
- 4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 16-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
4 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 20- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடிவிட்டு தூங்க சென்றனர். அதிகாலை 2.10 மணிக்கு திடீரென சத்தம் கேட்டுள்ளது.
உடனே குடியிருப்பு வாசிகள் வீடுகளை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தம் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, சப்- இன்ஸ்பெக்டர் பாட்ஷா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசாரால் உடனடியாக எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
ஏதாவது ஒரு வாகனத்தில் தீப்பொறி பட்டு மற்ற வாகனங்கள் எரிந்திருக்கலாம். அல்லது யாராவது வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கி ன்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனங்கள் எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு 6 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தும். அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா இல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.